உலக நீதி – பாடல் 12 | வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம் | Ulaganeethi – Poem 12

உலகநாதரின் உலக நீதி – பாடல் 12
Ulaga neethi poetry written by Ulaganathar.
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

source

Leave a Reply

© 2026 Millimeter Kathaigal - WordPress Video Theme by WPEnjoy